November 28, 2009

லினக்ஸ்

வாழ்க்கைல எவ்ளோ மாறுதல்கள். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செல் மனித உடல்ல அழிஞ்சி மறுபடியும் பொறக்குது. மாற்றம் இல்லாத மனிதனே இல்லை. சின்ன வயசில நமக்கு அதிசயமா தெரிஞ்ச விசயம் இப்போ நடைமுறை ஆகிடிச்சி. வாழ்க்கைல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்ன புதுசா கத்துக்குறோம். செய்றோம். சின்ன வயசில கணக்கு படிக்க வாய்ப்பாடு புத்தகம் தேவைப்பட்டது. இப்போ நாம மணக்கணக்கு போட கத்துகிட்டோம். அதே மாதிரிதான் எல்லாமே. கணிப்பொறி கூட. கணிப்பொறிய பாத்து பயந்த மனிதனுக்கு இப்போ அத்தியாவசியம் ஆகிடிச்சி. செல்பேசி வந்த புதுசில அதிசயமா இருந்த செங்கல்கட்டி போன் ( எரிக்சன் ) இப்போ இருக்க இடம் தெரியல. தொழில்நுட்பம் வளந்து வளந்து இப்போ கட்டெறும்பா தேய்ஞ்சி போச்சி. உலகமே மாறிப்போச்சு. மனுசங்க கூட. அந்த காலத்து மனிசன தேடுறது இப்போ ரொம்ப கஷ்டம். கணிப்பொறி கத்துக்க விண்டோஸ்னு ஒரு இயங்குதளம் தேவைப்பட்டது. இனிமேலும் அதையே பயன்படுத்தனும்னு அவசியம் இல்ல. கணக்கு போட இப்போ யாரும் வாய்ப்பாடு புத்தகம் தேடுறது இல்ல. அதே மாதிரி கணினி அறிவு வளர்ந்த பிறகு, விண்டோஸ் பயன்படுத்துறது நம்ம அறியாமைய தான் காட்டுது. எல்லா விசயத்திலும் அறிவை வளர்த்துக்கனும்னு நெனைக்கிற நாம கணிப்பொறி விசயத்துல ஏன் தயக்கம் காட்டுறோம். கணினினா விண்டோஸ் தான் அப்படினு நெறைய பேரு நினெச்சிட்டி இருக்கது, அதிமுக நா எம்.ஜி.ஆர் தான் அப்படினு நினெக்கிற கிராமத்துல அறியாமைல மூழ்கி இருக்க சில மனிதர்கள தான் நினைவூட்டுது. காலம் மாறிக்கிட்டே வருது. உங்கள சுத்தி இருக்க உலகமே மாறிட்டு வருது. உங்கள நீங்க புதுப்பிக்க வேண்டிய நாள் வந்துருச்சி. கண்ணை தெறந்து உலகத்த பாருங்க. யாரோ எப்பவோ லினக்ஸ் பயன்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு சொன்னத இன்னும் நம்பிட்டு இருக்காம என்ன தான் நடக்கும்னு பாருங்க. பயமா இருக்கா? அதுக்கும் தீர்வு இருக்கு. நீங்க லினக்ஸை இன்ஸ்டால் பண்ணாமலே லினக்ஸ் கத்துக்க, லினக்ஸ் லைவ்சிடி வந்துருச்சி. உங்க சிடி பிளேயர்ல இந்த சிடிய போட்டா அதுவே லினக்ஸ் டெஸ்க்டாப் வரைக்கும் கொண்டுபோய் விட்டிரும். உங்க கணிப்பொறிக்கு எந்த ஆபத்தும் வராது. கத்துக்கிட்டு உங்களுக்கு புரிஞ்ச அப்பறம் நீங்க விருப்பப்பட்டா லினக்ஸ் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். மறுபடியும், உங்களுக்கு இன்னொரு தீர்வு இதை விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்பட்ட கணினிலே இன்னொரு இடத்துல லினக்ஸையும் இன்ஸ்டால் பண்ணிக்கலாம்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home