September 30, 2008

கூகிள் பண்பாடு

இது எனது முதல் தமிழ் வலை பதிவு. கூகிள் இன்று உலகின் முதல் பெரிய தேடு தளம். இருப்பினும் அதன் பரந்த மனபாண்மை நம்மை வியக்க வைக்கிறது. கடந்த சில நாட்களாக யாஹூ எனும் இரண்டாவது பெரிய தேடு தளம் விற்பனைக்கு வந்தது. அதனை அபகரிக்க மைக்ரோசாப்ட் பல யுக்திகளை மேற்கொண்டது. யாஹூ கூகிள் இக்கும் அழைப்பு விடுத்தது. மைக்ரோசாப்ட் யாஹூவை அபகரித்து அதனுடைய வருவாயை அதிகரிக்க திட்டமிட்டது. அதனை தடுக்கும் வண்ணம் கூகிள் யகூவிற்க்கு உதவி செய்ய முன்வந்தது. என்னதான் போட்டியாளராக இருந்தாலும் அதனையும் வளரவைக்க முன்வந்தது கூகிள். தனது மிகப்பெரிய சாதனை தளமான கூகிள் அட்சென்சை யாஹூ பயன்படுத்தி அதன் மூலம் வரும் வருவாயை யாஹூ தனது வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள நிபந்தனை அற்ற ஒப்புதலை கூகிள் அறிவித்துள்ளது. இதன் மூலம் யாஹூ தனது வருவாயை அதிகரித்து தொடர்ந்து கூகிள் இன் போட்டியாளராக இருக்கும். இந்த பரந்த மனபாண்மை மைக்ரோசாப்ட் மற்றும் பில் கேட்ஸ் போன்றவர்களுக்கு வருவதில் சாத்தியமில்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home